தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Mar 2026, 4:20 pm

ரூ. 2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கம்

கிருஷ்ணகிரி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் அடாவடிப் போர் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கமடைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளான துபாய், சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிருந்து மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மொத்த உற்பத்தியின் சுமார் 50 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், போர் காரணமாக ஏற்றுமதி தடைபட்டு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களில் மாம்பழக்கூழ் தேக்கமடைந்துள்ளது.

முட்டை ஏற்றுமதி நிறுத்தம்

நாமக்கல்: போர் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல்களில் அனுப்பப்பட்ட 77 கண்டெய்னர்களில் இருந்த சுமார் 3.50 கோடி முட்டைகள் கடந்த 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக தினமும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இராக் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள்?

சென்னை: சென்னையில் சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் 5,000 ரூபாய் வரை விற்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரிய பெரிய உணவகங்கள் ஸ்டார் ஹோட்டல்கள் அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்கிக் கொள்கிறார்கள். மிகச் சிறிய அளவில் உணவகங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். வீட்டு உபயோக சிலிண்டர்களை சற்று கூடுதலாக பணம் கொடுத்து வாங்கும் அவலமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமதாஸ் வழக்கிற்கு இடைக்காலத் தடை

சென்னை: பாமக கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையிருப்பு தீர்ந்து போனதால் பெட்ரோல் பங்குகள் மூடல்

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொது மக்கள் அதிகளவில் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி வருகின்றனர். இதனால் சென்னையின் பல பகுதிகளில் உள்ள ஏராளமான பெட்ரோல் பங்குகளில் விரைவாகவே கை யிருப்பு தீர்ந்ததால் பெட்ரோல் பங்குகள் தற் காலிகமாக மூடப்பட்டுள் ளன.

ஆயுதப்படைக் காவலர் டிஸ்மிஸ்

புதுச்சேரி: ஜார்க்கண் டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுச்சேரி ஆளு நர் மாளிகையில் அனுமதி யின்றி நுழைந்து விருந்தி னர் அறைக்குள் சென்று உறங்கிய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பின் னணியில் பாதுகாப்பு பணி யில் இருந்த ஆயுதப் படைக் காவலர் வசந்த ராஜா பணியிலிருந்து நீக்க ப்பட்டுள்ளார். மேலும், தலைமைக் காவலர் ஆன ந்த வேல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் பூங்காவில் பராமரிப்புப் பணி

சென்னை: வண்ட லூரில் அமைந்துள்ள அறி ஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் சபாரி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. இதன் காரணமாக மார்ச் 18 முதல் 28 வரை அந்த சபாரி பகுதி களுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட் டார்கள் என்று பூங்கா நிர் வாகம் அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி

சென்னை: எரி பொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில் தகவல் தொழில்நுட்ப நிறுவன மான எச்.சி.எல். தனது ஊழியர்களுக்கு வீட்டி லிருந்தே பணிபுரிய அனு மதி வழங்கியுள்ளது. அவ சியமான மற்றும் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மட்டும் அலு வலகத்திற்கு வர வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிறுவன வளா கங்களில் உள்ள கேன்டீன் கள் செயல்படாததால் செ ன்னை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களு க்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.