முந்தய பக்கம்

ல்பாக்கத்தில் சிஐஎஸ்எப்  பாதுகாப்புடன் பெட்ரோல் விநியோகம்

12 Mar 2026, 4:20 pm
ல்பாக்கத்தில் சிஐஎஸ்எப்  பாதுகாப்புடன் பெட்ரோல் விநியோகம்
<p><strong>ல்பாக்கத்தில் சிஐஎஸ்எப் &nbsp;பாதுகாப்புடன் பெட்ரோல் விநியோகம்</strong></p> <p>கல்பாக்கம், மார்ச் 12- ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் கச்சா எண்ணை வரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள தால், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொது மக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுசக்தி நகரி யத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வாகனங்களை வரிசைப்படுத்தி பெட்ரோல் விநியோகத்தைச் சீர்செய்தனர். இதேபோல் மதுராந்தகம், மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் கூட்டமாகத் திரண்டதால் ஊழியர்கள் திணறினர். சில பங்குகளில் இருப்பு தீர்ந்துவிட்டதாக அறிவிப்புப் பலகை கள் வைக்கப்பட்டன. மேலும், பாதுகாப்பு கருதி கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்ட தால், கேன்களுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram