தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்படாவிடில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகும்!

30 May 2026, 9:32 pm
பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்படாவிடில்  பொருளாதார நெருக்கடி தீவிரமாகும்!

பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்படாவிடில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகும்!

கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை! சிதம்பரம், மே 30 - ஒன்றிய - மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மக்கள் விரோத வரி களை உடனடியாகக் குறைக்கத் தவறி னால், நாட்டில் மிகப்பெரிய பொருளா தார நெருக்கடி தீவிரமடைவதைத் தவிர்க்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ் ணன் எச்சரித்துள்ளார்.

சிதம்பரத்தில் சனிக்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது சுமார் 60 சத விகித வரியை விதித்து வருகின்றன. இந்த மக்கள் விரோத வரியை அரசு கள் உடனடியாகக் குறைக்க முன்வர வேண்டும்.

இல்லையெனில், இந்தியா வில் மீண்டும் ஒரு மிகப்பெரிய பொரு ளாதார நெருக்கடி தீவிரமடைவதைத் தடுக்க முடியாது என்றார்.

தவெக-வின் அரசியல் மீதான விமர்சனம் “தமிழகத்தில் மக்கள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தவெக-வை எதிர்பார்ப்புகளுடன் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இருப்பினும், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

ஆனால், மக்களுக்குப் பணி செய் வதை விடுத்து, மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ -க்களைப் பதவி விலகச் செய்து, அடுத்த ஐந்து நிமிடங்களில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளும் தற்போதைய ஆளும் தவெக-வின் அரசியல் நடவ டிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக் கது; இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

மேலும், தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் ஒரு கண்ணா மூச்சி ஆட்டமாக உள்ளது. நிபந்தனை களின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். அதிமுக மற்றும் பாஜக வீழ்ச்சி “அதிமுக என்பது இன்று நேற்று பிளவுபடவில்லை; எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அது பல பிரிவுகளாக உடைந்தது.

தற்போது அக்கட்சியின் மூடுவிழாவை எடப்பாடி கே. பழனிசாமி முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி மலரும் என்று அமித்ஷா நம்பியிருந்தார்.

ஆனால், கடந்த தேர்த லில் 11 சதவிகித வாக்குகள் பெற்றிருந்த பாஜக, தற்போதைய தேர்தலில் வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று, தமிழ்நாட்டு மக்களால் முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.