தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி, நெல்லையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

20 May 2026, 10:10 pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி, நெல்லையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி, நெல்லையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி, மே 20- பொதுமக்கள், வாகன ஓட்டிக ளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல்,சமையல் கேஸ் ஆகிய வற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் விலை உயர்வை திரும்பப்பெறக்கோ ரியும் மே 20 அன்று இடதுசா ரிக்கட்சிகள் சார்பில் தூத்துக்குடி, நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தூத்துக்குடி பரமன் குறிச்சியில் நொங்கு வண்டியை ஓட்டி நூதனப் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில் உரை யாற்றினார். மூத்த தோழர்கள் ஆதிநாராயணன், மகாராஜன், கமிட்டி உறுப்பினர்கள் சக்திவேல், செல்வி, அஜ்மல் மற்றும் உள்பட பலர் பங்கேற்றனர். நெல்லை நெல்லை வண்ணார்பேட்டை யில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழ மை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி. பாஸ்கரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேதுராம லிங்கம், சிபிஐ (எம்-எல்) மாநி லக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.மோகன், கே.மாரிச்செல் வம் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலா ளர் சுந்தர்ராஜ் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.