பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்கிறது?
9 May 2026, 10:47 pm

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்கிறது?

புதுதில்லி, மே 9 - பெட்ரோல் - டீசல் விலை மே 15-ஆம் தேதிக்குள் அதிரடியாக விலை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா - இஸ்ரேலின் அடாவடி யால், மேற்கு ஆசியாவில் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கச்சா எண்ணெய் போக்கு வரத்திற்கான ஹார்முஸ் ஜலசந்தி சிக்கலில் உள்ளது.

இதனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக மோச மான எரிசக்தி நெருக்கடிளை உலகம் எதிர்கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை ஒரு பேர லுக்கு சுமார் 70 டாலரிலிருந்து கிட்டத் தட்ட 126 டாலராக உயர்ந்துள்ளது. இத னால் உலக நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள் ளன.

அரசாங்கங்கள் அவசரகாலக் கட்டுப்பாடுகளை விதித்து வரு கின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரலாறு காணாத விலையை செலுத்தி வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை வெகுவாக குறைந்த போதும், மோடி அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் எரிவாயு விலை களை குறைக்கவில்லை.

மாறாக, வரி களைப் போட்டு பல லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் சுரண்டின

. தற்போது, சர்வதேச சந்தையி லேயே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால், அதைக் கார ணம் காட்டி மீண்டும் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அடம் பிடித்து வரு கின்றன.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு களுக்காக பெட்ரோல், டீசல் விலை யை மோடி அரசு தள்ளிப் போட்டு வந் தது. அப்படியும் கூட, அண்மையில், வணிக எரிவாயு சிலிண்டர் விலையை 928 ரூபாய் 50 காசுகள் அளவிற்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலை மே 15 ஆம் தேதிக்குள் அதிரடி யாக விலை உயரலாம் என்று தக வல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரையும், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை யும் உயரக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந் தித்து வருவதாக கூறி, இந்த விலை உயர்வுக்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.