தவிர்க்க முடியாததா இந்த விலை உயர்வு?
15 May 2026, 8:45 pm

தவிர்க்க முடியாததா இந்த விலை உயர்வு?

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.3 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடந்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.67க்கும், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.95.25க்கும் விற்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, வாகனங்களுக்கான கேஸ் விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தொடுத்து வரும் தாக்குதல் காரணமாகவே இந்த விலை உயர்வு என்றும், இது தவிர்க்க முடியாதது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு முறைப்படி அறிவிக்கப்படுவ தற்கு முன்பே சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டன. இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் விற் பனை செய்யும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனங்கள் மீண்டும் ஒரு சுற்று விலை உயர்வை அறிவிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்ற எண்ணத்தை பொதுப் புத்தியில் திணிப்ப தற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாட்டு மக்களுக்கு “இலவச” உபதேசங்களை செய்து வந்தார். கொரோனா பொது முடக்கக் காலம் போல மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் உபதேசித்தார்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக எண்ணெய் வணிகத்தில் பெரும் கொள்ளை யடித்த அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முத லாளிகள் தங்கள் கொள்ளையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. மாறாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிக்குறைப்பு செய்யப்பட்டு அதன் பலன் முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்கே செல்லுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

சர்வதேசச் சந்தை நெருக்கடி காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது என்றால், இப்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழ லுக்கு முன்பு குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், அதன் பலன் ஒரு பைசா கூட இந்திய மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்தது ஏன்?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மை. போர்ச்சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பதிலும் நிச்சய மற்ற தன்மை உள்ளது என்ற போதும், ஒன்றிய அரசு வரிக்குறைப்பின் மூலம் மக்கள் தலை யில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வை சுமத்துவதை ஓரளவு குறைக்க முடியும். இதனால் எண்ணெய் வணிகத்தின் மூலம் ஏற்கெனவே ஈட்டிய லாபத்தில் ஒரு பகு தியை பகிர்ந்தாலே போதும். இந்திய மக்கள் கடும் நெருக்கடியில் உள்ள போது மேலும் மேலும் இடிகளை மோடி அரசு இறக்கக்கூடாது.