10 நாட்களில் 3-ஆவது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
23 May 2026, 9:27 pm

10 நாட்களில் 3-ஆவது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னை, மே 23- ஒன்றிய பாஜக அரசானது, பெட் ரோல், டீசல் விலையை, 10 நாட்களுக் குள் 3-வது முறையாக உயர்த்தி, நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளது. சி.என்.ஜி. விலையையும் கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தியுள்ளது.

மே 15 அன்று, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த் திய ஒன்றிய பாஜக அரசு, அடுத்த 5 நாட்களுக்குள் மே 20-ஆம் தேதி மறு படியும் லிட்டருக்கு 90 காசுகள் வரை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை (மே 23) அன்று 3-ஆவது முறையாக பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி, மோடி அரசானது, ஏழை - நடுத்தர மக்கள் மீது தொடர் தாக்கு தல்களை அரங்கேற்றியுள்ளது.

லிட்டருக்கு 91 காசுகள் வரை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் 87 காசுகளும் விலை உயர்த்தப்பட்டு உள்ளன. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 105 ரூபாய் 31 காசுகளாகவும், டீசல் லிட்டர் 96 ரூபாய் 98 காசுகளாக வும் உயர்ந்துள்ளது.

அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் சி.என்.ஜி. (Compressed Natural Gas) விலையும், கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையுடன் சி.என்.ஜி விலையும் உயர்த்தப்பட் டுள்ளதால், வாடகைக் கார் ஓட்டுநர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக் கின்றனர். ஏற்கெனவே, வாகன பரா மரிப்புச் செலவுகள் கணிசமாக உயர்ந்திருக்கும் நிலையில், சி.என்.ஜி மற்றும் எரிபொருள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டுமென ஓட்டு நர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 15 வரை உயரலாம் என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.