ஐந்தே நாட்களில் 2-வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
19 May 2026, 8:52 pm

ஐந்தே நாட்களில் 2-வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னை, மே 19 - பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டு, 5 நாட்களே ஆன நிலையில், செவ்வா யன்று 2-ஆவது முறையாக லிட்டருக்கு சுமார் 90 காசுகள் வரை விலை உயர்த்தப் பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஒன்றிய பாஜக அரசானது, மே 15 அன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.

இதன்படி சென்னை யில், பெட்ரோல் விலை 2 ரூபாய் 83 காசுகள் அதிகரித்து லிட்டர் 103 ரூபாய் 67 காசுகளாகவும், டீசல் விலை 2 ரூபாய் 86 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 95 ரூபாய் 25 காசுகளாகவும் உயர்ந்தது. இது, இருசக்கர வாகன ஓட்டி கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் - உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யது.

இந்த விலை உயர்வானது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை நோக்கி இட்டுச் செல்லும் என்று அச்சம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் தான், ஐந்தே நாட்களில் லிட்டருக்கு 90 காசுகள் வரை பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப் பட்டு உள்ளன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது 82 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் விலை 86 காசுகள் அதிகரித்து லிட்டர் 96 ரூபாய் 11 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படு கிறது.

தலைநகர் தில்லியில், பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் 91 காசுகளும் விலை உயர்த்தப்பட் டுள்ளது.

மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 91 காசுகள், டீசல் லிட்டருக்கு 94 காசுகளும், கொல்கத்தாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 94 காசுகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இடதுசாரிக் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் - டீசல் விலை களை உயர்த்தி, மக்களின் வாழ்க்கை மீது தாக்குதல் நடத்திவரும், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில், புதன்கிழமை (மே 20) அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக, சென்னையில் காலை 10 மணிக்கு மிண்ட் (வள்ள லார் நகர்) பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.