தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு

26 May 2026, 9:02 pm
ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு

ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை; டீசல் ரூ.100-ஐ தொடுகிறது 11 நாட்களில் 4ஆவது முறையாக விலையை உயர்த்திய மோடி அரசு

புதுதில்லி, மே 26- மேற்கு ஆசிய நெருக்கடியை கையாள முடியாமல் திணறும் ஒன்றிய மோடி அரசு, மக்கள் மீது தொடர்ச்சியாக சுமையை ஏற்றி வருகிறது.

தனது சிக்கன அறிவிப்புக்குப் பின்னர், பிரதம மோடி கடந்த 11 நாட்களில் பெட் ரோல், டீசல் விலையை 4ஆவது முறையாக உயர்த்தி, நாட்டு மக்கள் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தி வருகிறார்.

மே 15 அன்று பெட்ரோல் லிட்ட ருக்கு 3 ரூபாய் 6 காசு, டீசல் 3 ரூபாய் 8 காசு என்ற அளவில் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, மே 19ஆம் தேதி பெட்ரோல் 74 காசு, டீசல் 78 காசு வரை விலையை உயர்த்தி யது.

தொடர்ந்து மே 23 அன்று 3ஆவது முறையாக பெட்ரோல் 80 காசும், டீசல் 85 காசும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 11 நாட்கள் இடைவெளியில் 4ஆவது முறையாக செவ்வாயன்றும் ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் விலை ரூ.2.61-க்கும், டீசல் விலை ரூ.2.71 அளவிற்கு உயர்த்தி நாட்டு மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி சென்னையில் செவ்வாயன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 (+2.46) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.55 (+2.57) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.