தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல்
25 May 2026, 9:41 pm

தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல்

கடந்த பத்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.4.78உம், டீசல் லிட்டருக்கு ரூ.4.84உம் உயர்த்தப்பட்டது.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.77 அளவுக்கும், டீசல் ரூ.97.55 ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எரிபொருள் உயர்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குத லாகும். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்னமும் விலை உயரக் கூடும் என்றே அபாயச் சங்கு ஊதுகின்றனர்.

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள தால், பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும் ஆபத்து எழுந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு போர்ச்சூழலை காரணம் காட்டி ஒன்றிய ஆட்சியாளர்கள் நியாயப்படுத்து கின்றனர். ஆனால் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் விலை உயர்த்தப்படவில்லை. ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள தால் கல்வி சார்ந்த செலவுகளை சமாளிக்க முடி யாமல் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

சமையல் எரிவாயு உருளைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு, மாதாமாதம் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. வீட்டு உப யோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.954 ஆக உயர்ந்துள்ளது.

வணிகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.3,237 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்ப சமையல் செலவு அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலராக சரிந்துள் ளது. ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரம் என்று கூறி தொடர்ந்து விலையை உயர்த்தி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. இதன் மூலம் தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிக ளின் கஜானாவை நிரப்ப ஒன்றிய அரசு துணை போகிறது. இந்த லட்சணத்தில் அமெரிக்கவுடன் செய்து கொள்ளப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தத் தின் மூலம் அந்த நாட்டிலிருந்து மேலும் எண் ணெய் இறக்குமதியை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் மீதான இந்த துல்லியத் தாக்குதல் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங் களை நிலைகுலையச் செய்யும்.