பூமி தான நிலத்தை பிரித்து வழங்க தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனுபூமி தான நிலத்தை பிரித்து வழங்க தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு
20 Jan 2026, 2:46 pm
<p><strong>பூமி தான நிலத்தை பிரித்து வழங்க தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனுபூமி தான நிலத்தை பிரித்து வழங்க தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு</strong></p>
<p>திருப்பூர், ஜன. 20 - தாராபுரம் வட்டத்தில் பூமி தான நிலத்தைப் பிரித்து வழங் கும்படி ஏழை, எளிய மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ், தாலுகா குழு ஒருங்கிணைப் பாளர் ஆர்.வெங்கட்ராமன், கிளைச் செயலாளர்கள் அழகர் சாமி, கே.பரமசிவம் உள்பட கிராமப்புற சுற்று வட்டார மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக் கொடுத்த னர். இதில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் தங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால், பூமி தான இயக்கத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.</p>
