பட்டா நிலத்தை அளவீடு செய்து வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு
19 Feb 2026, 3:09 pm
<p><strong>பட்டா நிலத்தை அளவீடு செய்து வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, பிப்.19- உளுந்தூர்பேட்டை அடுத்த எ.புத்தூர் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வரும் இந்து ஆதியன் (பூம்பூம் மாட்டுக்காரர்கள்) சமூகத்தைச் சேர்ந்த 14 குடும்பங்களுக்கு, புதுக்கேணி கிராம எல்லையில் கடந்த 2024 மார்ச் 06 அன்று தமிழக அரசால் பட்டா வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்தப் பட்டா நிலத்தை முறைப்படி அளவீடு செய்து, ‘இ-பட்டா’ வழங்கக் கோரி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களிடம் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.</p>
