பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு
10 Feb 2026, 4:50 pm
<p><strong> பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு</strong></p>
<p>விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம் பெருந்துறை கிராமத்தில் 22 குடும்பங்கள் தரிசு புறம்போக்கில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் வட்டாட்சியர் அரவிந்தன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. வரும் 11.2.26 அன்று நேரடியாக விசாரணை செய்து பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இதில் பழங்குடி மக்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் திரு. என். எஸ். அசோகன், கிளைச் செயலாளர் கே. எஸ். சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
