முந்தய பக்கம்

இலவச குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு

5 Mar 2026, 3:59 pm
இலவச குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு
<p><strong>இலவச குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு</strong></p> <p>சென்னை, மார்ச் 5- ராயபுரம் மாடல் லைன் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் கவிதாவிடம் சிபிஎம் சார்பில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தலை மையில் மனு அளிக்கப்பட்டது. அதில், ராயபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 52ஆவது வட்டம் பழைய வண்ணாரப்பேட்டையில், மாடல் லைனில் சென்னை மாநகராட்சி நிலத்தில் 5 தலைமுறைகளை கடந்து சுமார் 400 குடும்பங்கள் வசித்துக் கொண்டி ருக்கின்றனர். இவர்களில் 236 பேருக்கு கடந்த ஜனவரியில் இலவச குடிமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 134 பேருக்கு ஜனவரி மாதம் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மீதமுள்ள மக்க ளுக்கும் குடிமனை பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறப் பட்டுள்ளது. மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டாச்சியர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் பகுதி குழு உறுப்பினர் டி.வெங்கட், அமைப்புசாரா சங்கத்தின் நிர்வாகி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட ஊர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram