வாக்குரிமை, அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு
15 Dec 2025, 2:48 pm
<p><strong>வாக்குரிமை, அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>ஈரோடு, டிச. 15- குடிசை மாற்று வாரிய பகுதி யில் உள்ள மக்கள் வாக்குரிமை கேட்டும், அடிப்படை வசதிகளை கேட்டும் ஈரோடு மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று மனு கொடுத்தனர். முத்தம்பாளையம் குடிசை மாற் றுவாரியம் பாரதி நகர் பகுதி உள்ளது. இங்கு வசிப்பவர்கள் முன்பு பெரியார் நகர் குளத்துபனை பகுதியில் வசித்து வந்தனர். அந்த முகவரியில் அவர்க ளுக்கு அரசு ஆவணங்கள் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியிலிருந்து காலி செய்யப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக பாரதி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திங்களன்று மனு அளித்தனர். அதில், நாங்கள் சட்டமன்ற தேர் தல், நாடாளுமன்ற தேர்தல், நகராட்சி தேர்தலிலும் வாக்களித்தோம். எஸ்ஐஆர் வந்ததிலிருந்து கிழக்கு சட்டமன்ற தொகுதி குளத்துப்பனை முகவரியில் வாக்களிக்க ஓட்டு ரிமை இல்லை என்கின்றனர். எனவே தங்களுக்கு தற்போது வசிக்கும் முக வரியில் வாக்களிக்க உரிமை பெற் றுத் தர வேண்டும். 256 குடும்பத்தி னர் வசித்து வருகிறோம். மற்ற ஆவ ணங்கள் முகவரி மாற்றம் செய்யவும் முகாம் அமைத்துக் கொடுக்க வேண் டும் என்று அதில் கேட்டுள்ளனர். அத் துடன் குடிநீர் வசதி இல்லை என்றும், சாலை வசதி இல்லாததால் ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண் டிய நிலையில் உள்ளோம். தெரு விளக்குகள் முறையாக பராமரிக் கப்படவில்லை. போதுமான அத்தி யாவசிய வசதிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள் ளனர். சிபிஎம் வீரப்பன்சத்திரம் பகுதியில் மாந ராட்சிப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பழுதாகிவிட்டதை சரி செய்து கொடுக்க வேண்டும். பள்ளி முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். 23 வது வார்டு பெரிய குட்டை வீதி பகுதியில் ஆண் பெண் இருபாலருடைய கழிப்பிடங்கள் பழு தடைந்து இருப்பதை சரி செய்து கொடுக்க வேண்டும் என மாநக ராட்சியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மேயர் சு.நாகரத்தினத்தி டம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் வி.பாண்டியன் தலைமை யில் வீரப்பன்சத்திரம் கிளை செயலா ளர் சி.கே.முருகேசன், கமலா நகர் கிளை செயலாளர் ஏ.மணி, ஜான்சி நகர் கிளை செயலாளர் வி.பி.சிவக் குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் ஆகி யோர் பங்கேற்றனர். முன்னதாக, பி.டி.ஆர் நினைவு தினத்தில், ஈரோடு மாநகராட்சிக்குட் பட்ட 25ஆவது வார்டு கமலா நகர் பகுதியில் மேற்கண்ட கோரிக் கைகள் குறித்து பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்று மேயர் மற்றும் துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.</p>
<p> </p>
