முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு

11 Nov 2025, 3:41 pm
குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு
<p><strong>குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு</strong></p> <p>தருமபுரி, நவ.11- பல ஆண்டுகளாக குடி நீர் இல்லாமல் அவதிப்படு வதாக நேதாஜி நகர் &nbsp;பொதுமக்கள் தருமபுரி &nbsp;மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள &nbsp;இலக்கியம்பட்டி, நேதாஜி நகரில் 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுக ளாகவே குடிநீர் வசதி இல்லாமல், குடிநீருக்காக அருகில் பகு திகளுக்கு ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாண வர்கள் என தினந்தோறும் சென்று தண்ணீர் எடுத்து வர &nbsp;வேண்டிய நிலை இருந்து வருகிறது. குடிநீர் வசதி ஏற்படுத் தித்தர வேண்டும் எனக்கோரி வட்ட வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, &nbsp;ஆட்சியர் தலையிட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் &nbsp;என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram