முந்தய பக்கம்

சாலை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு

16 Dec 2025, 11:54 am
சாலை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு
<p><strong>சாலை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு</strong></p> <p>உதகை, டிச.16- மேட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி &nbsp;ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டதிற்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். இதில் &nbsp;உதகை நகராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட பாரதியார் நகர், மேட்டுச்சேரி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் லயோலா குமார் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அதில், பாரதியார் நகர் மற்றும் மேட்டுச்சேரி பகுதி களில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதிகளுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட வர முடியாத நிலை உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களும், பணிக்குச் செல் வோரும் கரடு முரடான மண் சாலையிலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தி டம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடி யாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram