விளை நிலங்களை சேதப்படுத்தும் யானை நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
11 Nov 2025, 3:41 pm

விளை நிலங்களை சேதப்படுத்தும் யானை நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

உதகை, நவ.11- தோடர் மந்துகளில் உள்ள விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தி வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோடர் இன மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் பூர்வீக காலமாக வாழ்ந்து வரும் தோடர் இன மக்கள் சுமார் 8௦ மந்துக்களில் குடியிருந்து வருகிறோம். எங்க ளது பூர்வீக தொழிலான எருமை வளர்ப்பு. மேய்ச்சல் நிலம் அழிந்து விட்டதால் நாங்கள் எங்களது நிலத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் பெற்று விவசாயம் செய்து வருகி றோம். கடந்த ஆறு மாத காலமாக எங்களது விவசாய நிலங் களில் யானை புகுந்து, பயிர்களை அழித்து வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து ஆட்களை துரத்துகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும், தற் போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதன் மீது தனி கவனம் எடுத்து, எங்களது வாழ்வாதாரம் மற்றும் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிக்குழு அமைத்து யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்து வனத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.