முந்தய பக்கம்

சகஜானந்தா மணிமண்டபம் பயிற்சி மையத்தை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

12 Dec 2025, 3:12 pm
சகஜானந்தா மணிமண்டபம்  பயிற்சி மையத்தை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
<p>கடலூர், டிச.12- சிதம்பரம் சுவாமி சகஜானந்தா மணிமண்ட பத்தில், சுமார் ஐந்து ஆண்டு களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ் ணன் முன்முயற்சியால் இதற்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் பயிற்சி மையம் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்தப் பயிற்சி மையத்தைத் திறந்து, தமிழக அரசின் &lsquo;நான் முதல்வன்&rsquo; திட்டத்தின் கீழ் பயிற்சி ஆசிரியர்களை நியமித்து, ஏழை மற்றும் விளிம்பு நிலை மாண வர்கள் படிப்பதற்கு வழி வகை செய்யுமாறு தீண்டா மை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பழ.வாஞ்சி நாதன் தலைமையில், மாவட்டத் தலைவர் ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டத் துணைத் தலை வர் வி. சுப்புராயன், சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். பாலையா, பொரு ளாளர் பி. செல்வராஜ் மற்றும் ஜீவா, சாமிதுரை உள்ளிட்டோர் மனு அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram