மதுக்கடைகளை அகற்றக் கோரி டாஸ்மாக் பொது மேலாளரிடம் மனு
19 May 2026, 1:08 am
<p><strong> மதுக்கடைகளை அகற்றக் கோரி டாஸ்மாக் பொது மேலாளரிடம் மனு</strong></p><p>சென்னை, மே 18- தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களுக்கு அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூட அரசு அறிவித்துள்ள நிலையில், அயனாவரம் பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி டாஸ்மாக் பொது மேலாளரிடம் வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் திங்களன்று மனு அளித்தனர். அயனாவரம் மாநக ராட்சி பள்ளி மற்றும் அயனா வரம் மார்க்கெட் கே.எச். நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.பி.யூஜின் பர்க், வில்லிவாக்கம் பகுதித் தலைவர் ஏ.டேவிட் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.</p>
