தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி மனு

20 Jun 2026, 12:02 am
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி மனு
<p><strong>ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி மனு</strong></p><p>வந்தவாசி, ஜூன் 19 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் அருங்குணம் கிராமத்தில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களை, மாற்று சமூகத்தினர் மோசடியாக ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அபகரிக்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, உரிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. வந்த வாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் அண்ணாமலை தலைமையில், வட்டாட்சி யரிடம் இது குறித்துக் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மனுவில், &quot;அருங்குணம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களைச் சட்டப்பூர்வமாக மீட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அன்பழகன் என்பவ ரின் பஞ்சமி நிலத்தை மீட்டு ஒப்படைக்குமாறு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் செய்யாறு சார் ஆட்சியருக்கு வழங்கிய உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்&quot; என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் அப்துல்காதர், சுகுணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.