முந்தய பக்கம்

இஎஸ்ஐ, இபிஎப் தொகை வழங்கக் கோரி ராணிப்பேட்டை நகராட்சி ஆணையரிடம் மனு

12 Dec 2025, 3:12 pm
இஎஸ்ஐ, இபிஎப் தொகை வழங்கக் கோரி ராணிப்பேட்டை நகராட்சி ஆணையரிடம் மனு
<p>ராணிப்பேட்டை,டிச.12- வாலாஜா நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, நீண்ட நாட்களாக வழங்கப்படா மல் உள்ள இஎஸ்ஐ மற்றும் வருங்கால வைப்பு நிதி &nbsp;தொகைகளை உடனடியாக வழங்கக் கோரி, நகராட்சி ஆணைய ரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணி யாளர்களின் தினக்கூலியில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ மற்றும் இபிஎஃப் தொகைகள் அவர்க ளது கணக்குகளில் முறையாக வரவு வைக்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர்க ளின் சேமிப்பு பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிக்கும் நிகழ்வில் கவுரவ தலைவர் ஏ.பி.எம்.சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ.தவராஜ், வாலாஜா நகராட்சித் தலைவர் டி. ரேணுகாதேவி, செயலாளர் பி. பெருமாள், பொருளாளர் ஏ. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram