தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் தொட்டி அமைக்க நிதி கேட்டு கே.சுப்பராயன் எம்.பி.,யிடம் மனு

22 Nov 2025, 3:59 pm
குடிநீர் தொட்டி அமைக்க நிதி கேட்டு கே.சுப்பராயன் எம்.பி.,யிடம் மனு
<p>ஈரோடு, நவ.22- கவுந்தப்பாடி ஊராட்சி யில் குடிநீர் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் அப்ப குதி பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், கவுந்தப் பாடி ஊராட்சிக்குட்பட்டது பெருமாம்பாளை யம் காலனி. இங்கு வசிக்கும் மக்களுக்கு &nbsp;மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் மற்றும் &nbsp;இதர பயன்பாடுகளுக்கு தண்ணீர் விநியோ கிக்கப்படுகிறது. ஒரே தொட்டியில் ஆற்றிலி ருந்து வரும் தண்ணீரை ஏற்றி குடிநீராக வும், ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறும் &nbsp;தண்ணீரை ஏற்றி இதர பயன்பாடுகளுக் குமானவையாக விநியோகிக்கின்றனர். இவ் வாறு விநியோகிக்கப்படும் தண்ணீர் பாது காப்பானதாகவும், போதுமானதாகவும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி மன்றத்தினை நாடினர். மனு &nbsp;கொடுத்துப் பேசியும் பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. தற்சமயம் நிர்வாகம் தனி அலுவ லரிடம் உள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகினர். நிதி இல்லாததால் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சிரமம் உள் ளது எனக்கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற &nbsp;உறுப்பினர் கே.சுப்பராயனிடம் அப்பகுதி மக்கள் சனியன்று மனு அளித்தனர். அப் போது, பழுதடைந்த தண்ணீர் தொட்டிக்கு மாற்று தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டும். அத்துடன் சமுதாயக் கூடம் அமைக்கவும் நிதி &nbsp;ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண் டுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சுப்ப ராயன், 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஜனவரி மாதத்தில் இறுதி செய்யும்போது ஏற்பாடு &nbsp;செய்கிறேன் என்று கூறியதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பவானி &nbsp;தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.