பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு
24 Nov 2025, 5:22 pm
<p><strong>பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு</strong></p>
<p>தருமபுரி, நவ.24- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலை வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளிக்கப்பட்டது. பாப்பிரெட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப் பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த 13 பேர், காங்., வி.சி., கட்சி யில் தலா ஒருவர் என 15 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர். பேரூராட்சி தலைவராக, திமுகவை சேர்ந்த மாரி உள் ளார். இந்நிலையில், பல கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 10 பேர் சேர்ந்து, பேரூராட்சி தலைவர் மாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் திங்க ளன்று மனு அளித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருக்கும் மாரி. மக்களின் குறைகளை தீர்ப்பதில்லை, பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்துவதில்லை. கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக் கைகளை நிறைவேற்றுவதில்லை. எனவே எங்களின் வார்டு பகுதிகளில் உள்ள மக்கள் பிரசசனைகளை தீர்க்க முடிய வில்லை. மக்கள் பிரச்சனையில் அக்கறை இல்லாத பேரூ ராட்சி தலைவர் மாரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.</p>
