பட்டியலின மக்களுக்கு பட்டா கேட்டு விதொச மனு
4 Dec 2025, 3:52 pm
<p><strong>பட்டியலின மக்களுக்கு பட்டா கேட்டு விதொச மனு</strong></p>
<p>தருமபுரி, டிச.4- பேதாதம்பட்டி பட்டியலின மக்க ளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், பேதாதம்பட்டியில் பட்டிய லினத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். பெரும்பகுதி மக்களுக்கு விவசாய நிலம் இல்லை; கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்ற னர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுத்த அரசு தொகுப்பு வீடு கள் உள்ளன. இந்த வீடுகளும் தற் போது பழுதடைந்துள்ளது. இதனால் புதியதாக திருமணமானவர்கள் வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற னர். இருக்கின்ற அரசு தொகுப்பு வீட்டை இரண்டாக, மூன்றாக தடுத்து சிறிய இடத்தில் குடியிருக்கும் அவலநிலை உள்ளது. மேலும், பலர் வீடு இல்லா மல் வாடகை வீட்டில் வசித்து வருகின்ற னர். பலர் வீடு இல்லாமலும் வேலை இல்லாமலும் வெளியூரில் தங்கி இருக் கும் சூழ்நிலை உள்ளது. எனவே, வீடு இல்லாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட வர்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழனன்று பாப்பிரெட்டிப்பட்டி வட் டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, வட்டச் செயலா ளர் எம்.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தி. வ.தனுசன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.குறளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
