30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தலித் மக்களுக்கு மனை பட்டா கேட்டு மனு
30 Dec 2025, 5:57 pm
<p><strong>30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தலித் மக்களுக்கு மனை பட்டா கேட்டு மனு</strong></p>
<p>சிதம்பரம், டிச.30- கீழ் வளையமாதேவி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனி வட்டாட்சியர அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.பிரகாஷ், புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி, வளையமாதேவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் உள்ளிட்ட கீழ் வளையமாதேவி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில் 1990-ஆம் ஆண்டு சென்னை 3-வது நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் 7ஆவது பிரிவின் படி நீங்கள் கொடுத்த அறிவிப்பு கடிதம் முறையாக எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. கீழ் வளைய மாதேவி கிராமத்தில் கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வருகிறோம் என்பதற்கு ஆதாரங்களையும் இந்த மனுவோடு இணைத்துள்ளோம் அதுமட்டுமில்லாமல் இந்த இடம் 1990 ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு பட்டா கொடுப்பதற்காக ஆதி திராவிட நலத்துறை யால் வாங்கப்பட்ட இடமாகும். எனவே இங்கு வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p>
