தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Jan 2026, 3:33 pm

சந்தன கூடு விழா நடத்த தடை கோரி மனு

மதுரை: திருப்பரங் குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு, மனுதாரர் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை; மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என அரசுத் தரப்பு வாதங் களை முன்வைத்தது. சந்தனக்கூடு கந்தூரி விழா என்று அழைப்பி தழில் அச்சடிக்கப்பட்டு உள்ளது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு டிச.21 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை நடைபெ றும் என தர்கா தரப்பு அறிவித்துள்ளது.

பாஸ்டேக்: கேஒய்சி நடைமுறை ரத்து

சென்னை: பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த கேஒய்சி நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப் படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்து உள்ளது. கார்கள், ஜீப்புகள், வேன்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான பாஸ்டேக் பெறும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் செயல்படுத்திய பிறகு கேவைசி நடை முறையால் ஏற்படும் தாமதம், சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. புதிய பாஸ்டேக் வழங்கும் முன்பு வங்கிகள் வாஹன் தரவு தளத்தில் வாக னங்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் வாங்கப்படும் பாஸ் டேக்களுக்கும் வாஹன் தரவு தளத்தில் வாகன விவ ரங்களை சரிபார்க்க வேண்டும். புதிய நடைமுறை மூலம் பாஸ்டேக் பெறுவது மிக எளிமையாகவும் வசதியாக வும் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

ஜன.6 வேலை நிறுத்தத்தில் 64 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: ஜனவரி 6 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ நடத்தும் தொடர் வேலைநிறுத்தத்தில் 64ஆயிரம் சத்து ணவு ஊழியர்கள் பங்கேற்க முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் மாநிலத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ஜெசி, மாநிலப் பொருளாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெசி செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சத்துணவு ஊழியர் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கை களான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது பண பலனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் கூட்டுப் போராட்டக் குழுவான ஜாக்டோ-ஜியோ அறி விப்பின்படி, ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 64,000 பேர் பங்கேற்கின்றனர். மாண வர்களை பட்டினி போடாமல், மாற்று ஏற்பாடு செய்து, இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங் களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது. அரக்கோணத்தில் பூங்காவுக்காக ஒதுக்கிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் எடுத்த நடவடிக்கை பற்றி இரண்டு வாரத்தில் அறிக்கை தர நகராட்சி ஆணையருக்கு ஆணை பிறப்பிக் கப்பட்டது. தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

உதகை, குன்னூரில் கனமழை: 16 இடங்களில் மண் சரிவு மலை ரயில் ரத்து

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழனன்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன் னூரில் 215 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீ ரென காலநிலை மாறி மழை பெய்தது. வியாழனன்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. மலை ரயில் பாதை யில் ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் முழுவதும் சகதியாக மாறியது. இதனால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

15.56 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யம் நடத்திய சிறப்பு அம லாக்கச் சோதனையில், மாநிலம் முழுவதும் மொத் தம் 9,248 கடைகளில் ஆய்வுகளும் சோதனை களும் நடத்தப்பட்டன. இதில் 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 15.56 டன் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.12,50,200 அபராத மாக விதிக்கப்பட்டது என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜன.19-இல் டெல்டா மண்டல மகளிர் மாநாடு

சென்னை: “வெல் லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட் டைத் தொடர்ந்து, தஞ்சா வூர் மாவட்டம், செங்கிப் பட்டியில் ஜன.19 ஆம் தேதி துணை பொதுச் செய லாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சம் வாகனங்கள் பதிவு

சென்னை: தமிழ் நாட்டில் 2025 ஆம் ஆண்டில் வாகன விற்பனை 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது என ஒன்றிய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 21,18,489 புதிய வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக கூறப்பட் டுள்ளது. 2024 ஆம் ஆண்டை விட, 8.4 சத வீதம் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றில், இருசக்கர வாகனங்களின் எண் ணிக்கை மட்டும் 16.40 லட்சமாகும். மின் வாக னங்கள் எண்ணிக்கை 2024-இல் ஒரு லட்சத்து 34 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த வாகன விற்பனையில், 40 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள் ளூர், கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங் களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.