விவசாயிகளின் பெயரில் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
25 Nov 2025, 3:29 pm
<p><strong>விவசாயிகளின் பெயரில் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு</strong></p>
<p>தருமபுரி, நவ.25- விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் பெயரில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட் டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், குரன்கொட்டாய் கிரா மத்தை சேர்ந்தவர் கோபி என்ற செந்தில் குமார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மோட்டாங்குறிச்சி, சவுளுக் கொட்டாய், புட்டிரெட்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், பொது மக்களிடம் பொம்மிடி கனரா வங்கியில் புதிய வங்கி கணக்கு தொடங்கித் தருவதாகக்கூறி, சுமார் 60 பேரிடம் ஆதார் அட்டை, புகைப்படம் பெற்று அவர்களின் பெய ரில் வங்கி கணக்கு தொடங்கி, விவசாயக்கடன் மற்றும் சுய தொழில் கடனை பெற்றுள்ளார். 3 வருடம் கழித்து வங்கியில் இருந்து வங்கி அலுவலர்கள் கடனை கட்ட சொல்லி விவசாயிகளுக்கும், பொதுமக்களும் நோட் டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நாங்கள் கடன் பெறவில்லை என தெரி வித்தனர். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் மோசடியாக கடனை பெற்ற கோபி என்கின்ற செந்தில் குமார் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த கனரா வங்கியின் அன்றைய மேலாளர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட் டுள்ளது.</p>
