சமத்துவபுரம் அமைக்கக்கோரி மனு
1 Dec 2025, 5:20 pm
<p><strong>சமத்துவபுரம் அமைக்கக்கோரி மனு</strong></p>
<p>நாமக்கல், டிச.1- மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் சமத்துவபுரம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மனுவில், நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் சந்தைப் பேட்டை பகுதியில் நாங்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் வசிக்கும் மக் கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். மேலும், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். இது வரைக்கும் ஆறு முறை மனுக்கள் கொடுத்தும் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மக்க ளின் கோரிக்கை ஏற்றுக் கொண்டு மல்லசமுத்திரம் ஒன்றியத் தில் சமத்துவபுரம் அமைத்துக் கொடுக்க வேண்டும், இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
