பணி ஆணையை உடனடியாக வழங்கக் கோரிக்கை சுகாதார ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மனு
25 Feb 2026, 3:22 pm

பணி ஆணையை உடனடியாக வழங்கக் கோரிக்கை சுகாதார ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மனு

சேலம், பிப்.25- சுகாதார ஆய்வாளர் பணி ஆணையை உடனடியாக தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதார ஆய் வாளர் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் புதனன்று சேலம் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித் தனர். இதுகுறித்து அம்மனுவில், கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி 1429 சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு எம்ஆர்பி மூலம் நடைபெற்றது. இதில் 1400 க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற் றனர். தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வு மூலம் இடத்தையும் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் கன்னியாகுமரியை சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் இந்த தேர்வில் குளறுபடி கள் நடந்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதன் கார ணமாக தற்போது வரை பணி ஆணை வழங் கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற தேர்வு மையத் தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட் டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மட்டும் குளறுபடிகள் நடந்திருப்பதாக தெரிவித்தார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிபிசி ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் சுகாதார ஆய்வாளர் பணி ஆணை வழங்கு வதற்கான எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்துள் ளார். எனவே இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு காலம் கடத்தாமல் பணி ஆணையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவித்தனர்.