முந்தய பக்கம்

விளையாட்டு மைதானம் கோரி மனு

15 Nov 2025, 4:09 pm
விளையாட்டு மைதானம் கோரி மனு
<p><strong>விளையாட்டு மைதானம் கோரி மனு</strong></p> <p>ஈரோடு, நவ.15- நல்லாம்பட்டி பேரூ ராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரூ ராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், &nbsp;நல்லம்பட்டி பேரூராட்சி, 4 மற்றும் 5 ஆவது &nbsp;வார்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் &nbsp;மற்றும் இளைஞர்கள் 100க்கும் மேற்பட் டோர் உள்ளனர். இவர்கள் கைப்பந்து விளை யாட்டில் அதிகம் ஆர்வமாக விளையாடி &nbsp;வருகிறார்கள். ஆனால், சரியான உபகரனங் கள், விளையாட்டு மைதானம் இல்லை. இத னால் பல இளைஞர்கள் சிரமபட்டு வருகின்ற னர். வெளியே சென்று விளையாடும் சூழல் &nbsp;உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியிலே &nbsp;அரசு புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு &nbsp;மைதானம் உருவாக்கித்தர வேண்டும் என &nbsp;வலியுறுத்தி நல்லாம்பட்டி பேரூராட்சி &nbsp;தலைவரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் &nbsp;சங்கத்தினர் மனு அளித்தனர். சங்கத்தின் &nbsp;மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஷாம்பிர வின், தாலுகா செயலாளர் கு.சதீஸ், கிளைத் &nbsp;தலைவர் ப.அருண், கிளைச் செயலாளர் ர. விஷால், திவாகர், ரோகித், ஆகாஷ், மைத் ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram