பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக்கழக ஆண்டு விழா ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்
17 May 2026, 10:32 pm

பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக்கழக ஆண்டு விழா ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்

தக்கலை, மே 17- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பாரதியார் விளையாட்டுக் கழகத்தின் 29-வது ஆண்டு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது.

விளையாட்டுக் கழக தலைவர் லாசர் தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட அளவிலான 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவி களுக்கான கலை இலக்கிய போட்டிகள், கிராமிய விளையாட்டுப் போட்டிகள் ,வடம் இழுத்தல் போட்டி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாலையில் ஆண்டுவிழா பொதுக்கூ ட்டம் ,பரிசு வழங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது.

சோபி ராஜன் வரவேற்றார். அறிக்கையை செயலாளர் ஜெல்பின் சமர்பித்தார். இந்நிகழ்ச்சியில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பால்தாஸ்,சிலம்பை டென்னின் ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிபிஎம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி சிறப்புரையாற்றினார்.

குமாரபுரம் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் மேரி மெற்றில்டா மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பாரதியார் விளையாட்டு கழக ஆலோசகர் ஜோசப் ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேசில் நன்றி கூறினார். நிறைவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.