பெருங்குடி குப்பைக்கிடங்கில்
22 May 2026, 11:47 pm
<p><strong>பெருங்குடி குப்பைக்கிடங்கில் </strong></p><p>சென்னை,மே 22- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் திடக்கழிவுகள் அகற்றப்படும் திட்ட செயல்பாடுகளை வெள்ளிக்கிழமை (மே 22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்பு தூய்மை இந்தியா 1.0 திட்டத்தின் கீழ் 350.065 கோடி ரூபாய் மதிப்பில், 225 ஏக்கர் பரப்பளவில் உள்ள 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழிக் கழிவுகளை அகற்றும் பணி 6 சிப்பங்களாக நடைபெற்று வருகிறது. இதில் சிப்பம் 3, 4 மற்றும் 5-ல் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, 94 ஏக்கர் நிலப்பரப்பு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 29,283.98 கனமீட்டர் பழைய திடக்கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, 53.60 கோடி ரூபாய் மதிப்பில் 5.50 லட்சம் மெட்ரிக் டன் பழைய திடக்கழிவுகளை அகற்றும் இரண்டாம் கட்ட பயோ-மைனிங் பணிகளைப் பார்வையிட்ட ஆணையர், இவற்றைத் திட்டக் காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார். புதிய உரமயமாக்கும் நிலையம் மீட்கப்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட உரமயமாக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆணையர், அப்பணிகளை விரைந்து முடித்து வரும் ஜூன் 30, 2026-க்கு முன்னர் நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். மறுசுழற்சி மற்றும் கழிவு செயலாக்கம் பெருங்குடியில் தினசரி 500 முதல் 600 மெட்ரிக் டன் வரை கட்டுமானக் கழிவுகளைச் செயலாக்கம் செய்யும் 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுசுழற்சி நிலையத்தின் செயல்பாடுகளை ஆணையர் மதிப்பாய்வு செய்தார். மேலும், அங்குள்ள 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட இளநீர் ஓடு மற்றும் தாவரக் கழிவு செயலாக்க நிலையத்தின் செயல்திறனை உலகத்தரத்திலான இயந்திரங்கள் மூலம் மேம்படுத்த உத்தரவிட்டார். மாநகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் களஆய்வு மேற்கொண்டு, விதிமீறி கொட்டப்படும் கட்டடக் கழிவுகளைக் கண்காணித்து உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின்போது, இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப. ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
