பெருங்குடி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்
5 Jun 2026, 3:22 am
<p><strong>பெருங்குடி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்</strong></p><p>சென்னை, ஜூன் 4- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டி அமைந்துள்ள பெருங் குடி குப்பை கொட்டும் வளாகத்தில் வியாழனன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இங்குள்ள 225 ஏக்கர் பரப்பளவில் தேங்கிக் கிடக்கும் 35 லட்சம் டன் பழைய திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றும் பணி கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது. காலையில் திடீரெனப் பற்றிய தீ, சில நிமிடங்களிலேயே வளாகம் முழு வதும் வேகமாகப் பரவியதால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும் புகை சூழ்ந்தது. இந்தத் தீ விபத்தின் போது, குப்பைக் கிடங்கிற்கு அருகில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் சிக்கி முற்றிலும் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கூடுதல் தண்ணீர் லாரிகள் உதவியு டன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் அதி காரிகளும் நேரில் ஆய்வு செய்து பணி களை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விப த்தால் ஏற்பட்ட கரும்புகை காரண மாக அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதுடன், பள்ளிக்கரணை முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக் கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் தேங்கி நின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசா ரித்து வருகின்றனர்.</p>
