மேல்நிலை முதலாமாண்டு வேளாண்மை அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்: மாணவர் சங்கம் கண்டனம்
11 Jun 2026, 12:25 am
<p><strong>மேல்நிலை முதலாமாண்டு வேளாண்மை அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்: மாணவர் சங்கம் கண்டனம்</strong></p><p>ஈரோடு, ஜூன் 10- பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேளாண் பிரிவு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் வேளாண் பாடப்பிரிவு நீக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் இல்லாத நிலையில் ஆசிரியரை நியமிக்க வேண்டும். உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என இந் திய மாணவர் சங்க ஈரோடு மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. தொழிற் கல்வி வேளாண் அறிவியல் பிரிவில் ஆசிரியர் ஓய்வு பெறும் பணியிடங்க ளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிக ளில் மாணவர் சேர்க்கையை உறுதிப் படுத்த வேண்டும். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற் றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறி வுறுத்த வேண்டும். மேல்நிலை வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பிரிவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட 293 பணியிடங்கள் உள்ளன. இதில் ஆசிரி யர்கள் ஓய்வு பெறும் சூழலில் பணி யிடங்களில் புதிதாக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கு இதுவரை எவ் வித முயற்சிகளும் எடுக்கப் படல்லை. மேலும், பணியிடங்களில் மாண வர்கள் சேர்க்கையும் தலைமை ஆசி ரியர்களாலும் முதன்மை கல்வி அலு வலர்களின் அறிவுறுத்தலாலும் நிறுத் தப்படுகின்றன. ஊதிய நீட்டிப்பு சம் பந்தமாக வெளியிடப்பட்ட அர சாணை நிலை எண் 77 நாள் 12.03.2026 ல் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள ஒழிவடையும் பணியிடங்கள் (VANISHING POSTS) என்ற வார்த் தையை அடிப்படையாகக் கொண்டு தலைமை ஆசிரியர்களும் முதன்மை கல்வி அலுவலர்களும் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க மறுக்கி றார்கள். இது விளிம்பு நிலை மாண வர்களையும் உயர்வான நிலைக்கு கொண்டு செல்ல பல கட்ட முயற்சி எடுக்கும் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. வேளாண்மை கல்வியை படிப்பத னால் எத்தகைய உயர்கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்புக ளும் இருக்கின்றன என்பதனை மாண வர் சமூகத்திற்கு ஆசிரியர்கள் உணர்த்தியுள்ளனர். விளையாட்டுக் கும், இதர பாடங்களுக்கும் அளிக் கப்படும் முக்கியத்துவம் வேளாண் மைக்கு அளிக்கப்படாதது வருத்தத் திற்குரியது. அதனால் மாணவர்கள் சேர்க்கை வந்தாலும் ஆசிரியர்களின் இப்படியான செயலால் தடுக்கப்படு கின்றன. எனவே, உரிய நடவடிக்கையை காலத்தே எடுத்து, இந்த வருடம் அனைத்து பள்ளிகளிலும் வேளாண் அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த உறுதி யான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் நாடு வேளாண்மைப் பட்டதாரி ஆசிரி யர்கள் சங்கத்தினரும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.</p>
