பெருமாநல்லூர் விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி
19 Jun 2026, 10:43 pm

பெருமாநல்லூர் விவசாய தியாகிகளுக்கு நினைவஞ்சலி

திருப்பூர், ஜூன் 19- மின் கட்டண குறைப் புக்கு எதிராக போராடி போலீ சாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகி களுக்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் நினை வஞ்சலி செலுத்தப்பட்டது.

1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் ஒரு பைசா மின் கட்டண உயர்வை எதிர்த்து பெருமாநல்லூரில் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது காவல்துறை துப் பாக்கி சூடு நடத்தியதில் இளம் விவசாயி களான ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண் டர், ஆயிக் கவுண்டர் ஆகியோர் இன்னுயிர் நீத்தனர். இதன் பின்பு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விவசாய போராட்டங்கள் நடை பெற்று 60க்கு மேற்பட்டோர் உயிர் தியாகம் செய்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் அனுப வித்து வரும் விவசாய மின் மோட்டார்க ளுக்கான இலவச மின்சாரம் எனும் சலுகை பெறப்பட்டது.

இந்த விவசாய தியாகிகளின் 56-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பாக கடைப்பிடிக்கப் பட்டது.

வெள்ளியன்று பெருமாநல்லூர் தியா கிகள் நினைவிடத்தில் உள்ள ஸ்தூபிக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் கே. ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆர்.ஆறுமுகம், அவிநாசி ஒன்றியச் செய லாளர் எஸ்.வெங்கடாசலம், தலைவர் முத்து ரத்தினம், ஊத்துக்குளி ஒன்றியச் செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் கே.சுப்பிரமணி, செயலாளர் ஆர். சந்திரன், துணைத்தலைவர் பரணி சீனிவா சன் உள்ளிட்டு ஏராளமான விவசாயிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதே போல் பல்வேறு விவசாய அமைப்புகளை சார்ந்தவர்களும் இந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.