தீக்கதிர் உலக செய்திகள்
4 Nov 2026, 9:37 pm

எல் நினோ தாக்கம் அவசரநிலை பிரகடனம்

எல் நினோ காரணமாகக் கடுமையான கனமழை பெய்யக்கூடும் என்ற தீவிர எச்சரிக்கையை அடுத்து, பெரு நாடு முழுவதும் உள்ள 1,380 மாவட்டங்களில் 60 நாட்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம் (Indeci) கடந்த அக்டோபர் 30 அன்று நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது .பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும், உடனடிப் பேரிடர் அபாயங்களைக் குறைக்கவும், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் ரயில் விபத்துஅமைச்சர் ராஜினாமா

ஸ்பெயினில் கடந்த வாரம் தண்டவாளத்தில் நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்தது. இவ்விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த நூற்றாண்டின் ஐரோப்பாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சம்பவம், ஸ்பெயின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பிறகு அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த ராணுவ வீரர்களை சித்ரவதை செய்த ஜெலென்ஸ்கி அரசு நவ நாஜி ராணுவப்பிரிவு நடத்திய வதை முகாம் கண்டுபிடிப்பு

கீவ்,நவ.4-உக்ரைனின் தலைநகர் கீவ் அருகேஅசோவ் (Azov) என்ற நவ நாஜிப்படையினரால் நடத்தப்பட்டு வந்த ஒரு ரகசிய ராணுவ சித்ரவதை முகாம் ஒன்று பொதுமக்களால் கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான போரில் ஈடுபடுத்துவதற்காக உக்ரைனில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அந்நாட்டுராணுவத்தால் பிடித்து செல்லப்படுகிறார்கள். அப்படி கட்டாய ராணுவச் சேவையில்ஈடுபடுத்தப்படும் நபர்கள் பலர் போர்க்களத்திலிருந்து தப்பி வருகின்றனர். அப்படிவந்ததாக சந்தேகிக்கப்படும் ராணுவ வீரர்களை கடத்திக்கொண்டு வந்து அந்நாட்டு தலைநகருக்கு அருகே உள்ள பகுதியில் ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில்பல நாட்கள் வைத்து பலவகைகளில் கொடூரமாகத்தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டப்பட்டுள்ளது.

தற்போது மக்களால் கண்டறியப்பட்ட இந்த வதை முகாமில் 14 வயது சிறுவன்உள்ளிட்டு சுமார் 40 பேர் பணையக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடந்து வரும் போர், வறுமை,பணவீக்கம், அத்தியாவசிய செலவுகள் அதிகரிப்பு, கட்டாய ராணுவ சேவைக்கு இளைஞர்களை கடத்திசெல்வது, ராணுவ கொள்முதல் துவங்கி அந்நாட்டில் ஆட்சியாளர்கள் செய்து வரும்ஊழல் ஆகியவற்றால் உக்ரைன் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் வதை முகாம் கண்டறியப்பட்டவுடன் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடி கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது உள்ளே இருந்த அசோவ் படையினர் மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இந்த பிரச்சனை மிகப்பெரியதாக மாறிராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியது. இச்சம்பவம் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, உக்ரைன் காவல்படைத் தளபதி அலெக்சாண்டர் பிவ்னென்கோ உக்ரைன் ஜனாதிபதியின் நேரடி தலைமை அதிகாரி கிரில்புடானோவ் நேரில் வந்து மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த கிரில்புடானோவ் உக்ரைன் முழுவதும் இது போன்ற “பல மையங்கள்” இயங்கி வருகிறது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களை கட்டாயப் போரில்ஈடுபடுத்துவதுடன் அவர்களை கடத்தி சித்ரவதை செய்யும் நடவடிக்கை அந்நாட்டுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல சர்வதேச அமைப்புகள் அந்நாட்டில் பல ரகசிய வதை முகாம்கள் செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இச்சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக்கிளப்பியுள்ளது.