தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாதாந்திர உரிமைத் தொகை உயர்வு கோரி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு

14 Feb 2026, 4:33 pm
மாதாந்திர உரிமைத் தொகை உயர்வு கோரி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு
<p><strong>மாதாந்திர உரிமைத் தொகை உயர்வு கோரி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு</strong></p> <p>மதுரை, பிப்.14- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை கள் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக் குழு &nbsp;சார்பில் மாதாந்திர உரிமைத் தொகையை உயர்த்தக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளிக்கப்பட்டது. மாதாந்திர உரிமைத் தொகையை ரூ. 6,000 ஆகவும், கடுமையான மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை &nbsp;உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 முதல் 14 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்தப் &nbsp;பட்டது. இதன் தொடர்ச்சியாக, சங்க மாநிலக் குழு வழிகாட்டுதலின்படி பிப்.14 சனிக்கிழமை &nbsp;அன்று திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பி னர்களை சந்தித்து மனு வழங்கினர். இந்த &nbsp;சந்திப்பில் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பி னருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், கோ.தளபதி மற்றும் பூமிநாதன் ஆகி யோர் மனுவை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் டி. குமரவேல், மாவட்டச் செயலாளர் ஆ.பால முருகன், மாவட்டத் தலைவர் மதிபாரதி, மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், செல் லம்மாள், ராமலிங்கம், ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், முத்து மற்றும் இருளாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்த &nbsp;அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.