தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொந்தரவு செய்யக் கூடாது தனிநபர் மசோதா அறிமுகம்  

7 Dec 2025, 3:52 pm
வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொந்தரவு செய்யக் கூடாது தனிநபர் மசோதா அறிமுகம்  
<p><strong>வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொந்தரவு செய்யக் கூடாது தனிநபர் மசோதா அறிமுகம் &nbsp;</strong></p> <p>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் &nbsp;தொடர் நடைபெற்று வரும் &nbsp;நிலையில், வேலை நேரத்திற்கு &nbsp;பிறகு ஊழியர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்ப கூடாது என்ற அம்சங்களை உள்ளடக்கிய, வேலை வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த புதிய தனிநபர் மசோதாவை தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் எம்.பி., சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் அறி முகம் செய்துள்ளார். துண்டித்துக் கொள் &nbsp;ளும் உரிமை 2025 என்ற பெயரில் இந்த &nbsp;மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் மன அழுத்தம், தனிப்பட்ட தொழில் வாழ்க்கைப் பதற் &nbsp;றத்தைக் குறைக்க இந்த உரிமையை அங்கீகரிக்க மசோதா கோருகிறது. உல கப் பொருளாதார மன்றத் தகவல்படி, பணியாளர்கள் எப்போதும் மெயில் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், &nbsp;வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டால், அவர்கள் தூக்கமின்மை, மன அழுத் தம், சோர்வு போன்றவற்றிற்கு பாதிக் கப்படுகிறார்கள் என்பது தெரிய வந்தி ருக்கிறது. இதனை &lsquo;டெலிப்ரஷர்&rsquo; என்று &nbsp;குறிப்பிடுவார்கள். &lsquo;டெலிப்ரஷர்&rsquo; பணி வாழ்க்கைச் சம நிலையைப் பாதித்துள்ளன. பணி செய்தி களைத் தொடர்ந்து கண்காணிப்பது மூளைக்குச் சுமையைக் கொடுத்து, &lsquo;இன்போ-ஒபிசிட்டி&rsquo; (அதிகத் தகவல் பரு மன்) நிலைக்கு வழிவகுக்கும் எனவும் மசோதா குறிப்பிடுகிறது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேர &nbsp;உறக்கம், குடும்பத்துடன் செலவழிக்க 8 மணி நேரம் என்று பல்வேறு நாடுகளும் நேர வரை முறையை பின்பற்றி வரு கின்றன. 8 மணி நேர வேலைக்கு பின்னர் &nbsp;நிறுவனத்தின் தொடர்பிலிருந்து முற்றிலு மாக துண்டித்துக் கொள்வது என்பது &nbsp;தொழிலாளியின் உரிமை என்று பிரான்ஸ், &nbsp;போர்ச்சுக்கல், ஆஸ்திரேலியா போன்ற &nbsp;நாடுகள் சட்டத்தை கொண்டு வந்திருக் கின்றன. இதே போன்ற சட்டத்தை இந்தி யாவிலும் அமல்படுத்த வேண்டும். எனவே பணி நேரத்திற்குப் பிறகு நிறுவனம் தொடர்பு கொண்டாலும், ஊழி யர்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாய மில்லை, மறுக்கும் உரிமை உண்டு என் பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது என்று சுப்ரியா சுலே எம்.பி., தனது மசோ தாவில் வலியுறுத்தியுள்ளார். சுப்ரியா சுலே எம்.பி.,யின் இந்த மசோ தாவிற்கு ஐடி ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரி வித்துள்ளனர். இது ஒரு தனிநபர் மசோதா என்பதால், &nbsp;இது சட்டமாக மாறுவதற்கான வாய்ப்பு கள் மிகக் குறைவு என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். எனினும், இது பணியா ளர்களின் நலன் மற்றும் பணிச் சுமை &nbsp;குறித்த முக்கிய விவாதத்தை நாடாளு மன்றத்திலும் பொதுவெளியிலும் எழுப்பி யுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.