தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு தெற்காசிய நீதி பிரச்சார அமைப்பு அறிக்கை

15 May 2026, 8:44 pm
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு தெற்காசிய நீதி பிரச்சார அமைப்பு அறிக்கை

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு தெற்காசிய நீதி பிரச்சார அமைப்பு அறிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தி யாவில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெற்காசிய நீதி பிரச்சார அமைப்பு ‘இந்திய துன்புறுத்தல் கண் காணிப்பு’ என்ற அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

4 மாதங்களில் 13 பேர் படுகொலை

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலப்பகுதியில் 8 மாநிலங்களில் இந்து தீவிரவாதக் குழுக்களால் 2 பெண்கள், ஒரு சிறுவன், 65 வயது முதியவர் உட்பட குறைந்தது 13 முஸ்லிம்கள் வெறுப்புக் குற்றங் களால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கும்பல் வன்முறையால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இதில் அடங்கும்.

பீகாரில் அதிகபட்சமாக 4 கொலைகளும், ஒரு தற்கொலை யும் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்ட், உத்த ரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதே காலப்பகுதியில் பாதுகாப்பு முகமைகளால் குறைந்தது 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

என்கவுண்டர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் குற்ற நடவடிக்கை களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, 2 முஸ்லிம் இளைஞர்கள் 48 மணி நேர இடை வெளியில் தனித்தனி போலீஸ் என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட னர். இதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அதே போல ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணு வத்தால் ஒரு முஸ்லிம் இளைஞர் சர்ச்சைக்குரிய என்கவுண்டரில் கொல்லப்பட்டார். தில்லியில் ஒரு முஸ்லிம் நபர் காவல் துறையின ரின் சித்ரவதை, கொடூரத்தால் லாக்-அப் மரணமடைந்தார்.

நோன்புக் கஞ்சி குடித்தால் கூட...

இந்தியாவில் மத வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் தொடர் கதை யாக உள்ளன. முஸ்லிம் மத நம்பி க்கையின் சாதாரண வெளிப்பாடு களைக் கூட குற்றமாக்கும் போக்கு அதிகரித்து வருவது தெளிவா கிறது. ரம்ஜான் தொடர்பான வழி பாடுகள், பிற மத சடங்குகளில் ஈடு பட்டதற்காக 40க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநி லத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் காலியாக இருந்த ஒரு வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தியதற்காக 12 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கங்கை நதியில் படகில் ரமலான் நோன்பு கஞ்சி குடித்த 14 முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

எஸ்ஐஆர்

வெறுப்புக் குற்றங்களை போல வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த பணி (எஸ்ஐஆர்) மூலமாகவும் முஸ்லிம் மக்கள் மிக மோச மான அளவில் துன்புறுத்தப் பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு பின் 13 மாநிலங்களில் 5.6 கோடிக்கும் அதிகமான வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்க ப்பட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர் சில தொகுதிகளில் முஸ்லிம்கள் நீக்கம் 95 சதவீதம் வரை இருக் கிறது.

மோடியும், அமித் ஷாவும்...

பிரதமர் மோடி, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் வங்காள வம்சா வளி முஸ்லிம்களை “ஊடுருவல் காரர்கள்” எனத் தூண்டும் வகை யில் பேசி வருவதும் வன்முறைக்கு முக்கிய காரணம் ஆகும்” என ‘இந்திய துன்புறுத்தல் கண்காணிப்பு’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.