கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பேரணாம்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல்
29 Oct 2026, 11:37 pm

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு பேரணாம்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர்,அக்.29-வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம், சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் எலும்பு அரைக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கடுமையான நிலத்தடி நீர் மாசுபாடு, விவசாயப் பாதிப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேடு

களால் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து அவ திக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், அதே ஊராட்சியில் மேலும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேரணாம் பட்டில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தால் பள்ளி வாகனங்கள் மற்றும் பேருந்து போக்குவரத்து கடு மையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு காவல்

துறையினர் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி,

உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.