கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 Nov 2025, 1:26 pm

தடயங்களை சென்னைக்கு அனுப்ப அனுமதி

கோவை, நவ.14- கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சேகரிப்பட்ட தடயங்களை சென்னைக்கு அனுப்ப நீதி மன்றம் அனுமதியளித்துள்ளது. கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாண வியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது. சம்பவம் நடந்த இடத்தில் போலீ சார் அரிவாள், மாணவியின் துணிகள், ரத்தக்கரை படிந்த பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை கைப்பற்றி னர். இவற்றை சென்னை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெற கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத் தில் போலீஸார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, தடயங்களை சென்னைக்கு அனுப்ப அனுமதி வழங்கினார்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு மிரட்டல்

கோவை, நவ.14- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9 ஆவது முறையாக மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் பள்ளிகள், நட்சத்திர விடுதி கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளியன்று 9 ஆவது முறையாக மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததும், உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள் உதவியுடன் அலுவலகத்தின் அனைத்து பகுதிக ளும் சோதனை செய்யப்பட்டன. இதன் காரணமாக வெள்ளி யன்று காலை நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் கள் மற்றும் அதிகாரிகளின் இயல்பான பணிகள் பாதிக்கப் பட்டன. பொதுமக்களின் வருகையும் தற்காலிகமாக கட்டுப்ப டுத்தப்பட்டது. நீண்ட சோதனைக்குப் பிறகு எவ்வித வெடி பொருளும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசார் உறுதிப்படுத்தினர்.

கொடநாடு வழக்கு: டிச.19க்கு ஒத்திவைப்பு

உதகை, நவ.14- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை டிச.19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி முரளி தரன் உத்தரவிட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முரளி தரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் நேரில் ஆஜ ராகினார். அதேபோல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீ சாரும் நேரில் ஆஜராகினர். அதேபோல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் டிச.19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்தி வைத்து உத்தர விட்டார்.