மார்த்தாண்டத்தில் 16 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
18 Mar 2026, 3:34 pm
<p><strong>மார்த்தாண்டத்தில் 16 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி</strong></p>
<p>குழித்துறை ,மார்ச் 18- தேர்தலை முன்னிட்டு மார்த்தா ண்டம் சப் டிவிஷனில் பகுதியில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் நடந்தது மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் தலைமை வகித்து பேசிய தாவது தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி வால்போஸ்ட் டர்கள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களாக இருந்தா லும் தனியார் சுவர்களாக இருந்தா லும் அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும். இன்று முதல் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த பணியாக இருந்தாலும் தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் கிராம பஞ்சாயத்து பகுதி யில் தனியார் சுவர்களில் விளம்ப ரம் செய்ய தனியார் சுவர் உரிமை யாளரிடம் அனுமதி பெற்று அந்த கடிதத்தை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து அனு மதி பெற்ற பிறகு விளம்பரம் செய்ய வேண்டும் பொது இடங்க ளில் கட்சிக் கொடிகள் இருக்கக் கூடாது கார்களில் கட்சி கொடி கள் இருக்கக் கூடாது பேனர், கொடிகள் கட்டினால் வேட்பாளர் செலவில் வரவு வைக்கப்படும் தேர்தல் முடியும் வரை ரூபாய் 50 ஆயிரத்துக்கு அதிகமாக கொண்டு செல்லக்கூடாது மனு தாக்கல் செய்யும் போதும் பிரச்சா ரம் செய்யும் போதும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் மனு தாக்கல் செய்யும் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர வேண்டும். குறிப்பிட்ட குறுகிய நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் தேர்தல் விதிகளை முறை யாக கடைப்பிடித்து எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் மார்த்தாண்டம் சப் டிவிஷ னுக்கு உட்பட்ட பகுதியில் கண்ணு மாமூடு, மஞ்சாலுமூடு, உத்த ரங்கோடு, புண்ணியம், பேணு, அரகநாடு, ஆலஞ்சோலை, ஜீரோ பாயிண்ட், அடைக்காக்குழி, நடைக்காவு, கலிங்கராஜபுரம், விரிவிளை, மங்காடு, காஞ்சாம் புரம், மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம், குழித்துறை யில் விஎல்சி மைதானம் போன்ற இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றாற் போல் இருக்கைகள், நிற்பவர்க ளின் எண்ணிக்கை போன்றவை உள்ளது .தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு டிஎஸ்பி நல்ல சிவம் பேசினார் அனைத்து கட்சிகள் சார்பில் கட்சி நிர்வாகிகள் பேசுகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவ தற்கு இடம் முக்கிய ஜங்ஷன் கொடுக்கப்படாமல் ஒதுக்குப்புற மாக கொடுக்கப்பட்டதாக எடுத்துக் கூறினர். இதற்கு தேர்தல் அதிகாரி கள் விளக்கம் அளித்தனர்.</p>
