தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 Mar 2026, 5:01 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் மன்றம் தவெகவினருக்கு கண்டனம்

சென்னை, மார்ச் 4 - சமூக வலைதளங்களில் ஊடகம் மற்றும் ஊடகவிய லாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான மற்றும் கீழ்த்தரமான விமர்சனங்களை பதிவு செய்து வரும் தவெக-வினருக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது,  அக்கட்சியின் தலைவர் விஜய் கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

முன் அனுமதி தேவையில்லை

சென்னை: டெட் (TET) தேர்ச்சி விவரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி தேவையில்லை  என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி சான்றி தழ்களின் உண்மைத் தன்மையை மாவட்டக் கல்வி அலு வலர்கள் ஆசிரியர் தேர்வு வாரியப் பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

போலிச் செய்திகளுக்கு எதிரான விழிப்புணர்வு தகவல் சரிபார்ப்பகம் நடவடிக்கை

சென்னை, மார்ச் 4 - சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராக விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் பணிகளை, தமிழ்நாடு அரசின் தகவல்  சரிபார்ப்பகம், தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்காக தனித்தனி பாடத்திட்டங்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இணையவெளிப் பாதுகாப்பு, போலிச் செய்தி களின் தாக்கம், வெறுப்புப் பேச்சின் விளைவுகள், சமூக நீதி, அறிவியல் மனப்பான்மை போன்ற தலைப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், நாட்டு நலப்பணித்திட்டத்துடன் இணைந்து பயிற்றுநர் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம்  முழுவதும் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் இதுவரை 1,25,000-க்கும் மேற்பட்டோரை சென்ற டைந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளை தங்கள் பகுதியில் நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் [connectfcu@gmail.com](mailto:connectfcu@gmail.com) என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள லாம்.

எம்எல்ஏ-க்கள் விடுதி பராமரிப்பு பணி டெண்டருக்கு அனுமதி!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியின் பரா மரிப்பு பணிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது. இந்த விடுதியில் உள்ள அறைகளின் பராமரிப்பு பணி களுக்காக பொதுப்பணித்துறை இ-டெண்டர் கோரி யிருந்தது. பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட டெண்டருக் கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், டெண்டரில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு  சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. ஆனால், சான்றிதழ் கோரியும் வழங்கப்படவில்லை எனக் கூறி, டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இரு ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னி லையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாக அரசுத்  தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன்  தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, டெண்டர்  நடவடிக்கைகளை தொடர அனுமதி வழங்கி வழக்கை  முடித்து வைத்தார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்க்கு ஊதிய உயர்வு!

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு 10 ஆண்டு களுக்கு பிறகு ஊதிய  உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி 2014 முதல் ரூ. 350 ஊதியம் பெற்று வந்த தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார் வையாளர்கள், இனி ஒரு நாளைக்கு ரூ. 500 விகிதம் மொத்தம் ரூ. 2,000 பெறுவார்கள். ஒரு  நாளைக்கு ரூ. 250  பெற்று வந்த வாக்குச் சாவடி அலுவலர்கள், இனி ரூ. 400 விகிதம் மொத்தம் ரூ.1,600 பெறு வார்கள். தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் இரண்டு  நாட்கள் கட்டாய பயிற்சிக் காக, தேர்தல் ஆணையம்  ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் ரூ. 12,500 ஒதுக்கி யுள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்த லுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 100 கோடியாக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட உள்ளன. ஒவ் வொரு வாக்குச்சாவடியி லும் ஒரு தலைமை அதி காரி, மூன்று வாக்குச் சாவடி அதிகாரிகள் மற்றும்  ஒரு அலுவலக உதவியா ளர் என மொத்தம் 3 லட் சத்து 45 ஆயிரத்து 160  பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரியில் தேமுதிகவுக்கு முரசு சின்னம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கான சின்னங் களை தேர்தல் ஆணை யம் ஒதுக்கீடு செய்து உள்ளது. அதன்படி, நாம்  தமிழர் கட்சிக்கு ‘விவ சாயி’ சின்னம் வழங்கப் பட்டுள்ளது. மேலும், தே.மு.தி.க.வுக்கு ‘முரசு’  சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மரபணு பரிசோதனைக்கு அனுமதி

சென்னை: பிரபல  சமையல் கலைஞர் மாதம் பட்டி ரங்கராஜுக்கு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டி.என்.ஏ. (DNA) பரிசோ தனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனு மதி வழங்கியுள்ளது. ஜாய்  கிரிசில்டா மற்றும் ரங்க ராஜ் தரப்பில் இந்த பரி சோதனைக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. மேலும்,  பரிசோதனை முடிவு களை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.