‘சாம்சங்’ தொழிலாளர் பிரச்சனையில் மனு கொடுப்பதற்கும் அனுமதி மறுப்பு
9 Feb 2026, 3:02 pm

‘சாம்சங்’ தொழிலாளர் பிரச்சனையில் மனு கொடுப்பதற்கும் அனுமதி மறுப்பு

சென்னை, பிப். 9 - தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ‘சாம்சங்’ நிறுவனத்தின் தொழிலாளர் விரோத செயல்கள் குறித்து, தென்கொ ரிய துணைத் தூதரகத்தில் மனு அளித்து முறையிடச் சென்ற சிஐடியு தலைவர் அ. சவுந்தரராசன், இ. முத்துக் குமார் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பு தூரில் அமைந்துள்ள ‘சாம்சங்’ நிறு வனம் இந்தியச் சட்டங்களை மதிக்கா மல் செயல்படுகிறது. எனவே, இந்தப் பிரச்சனையில் சென்னையிலுள்ள தென் கொரிய துணைத் தூதரகம் தலையிடக் கோரி, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ. முத்துக்குமார், செயலாளர் எல்லன், துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்டோர் திங்களன்று (ஜன.9) மனு அளித்து முறையிடச் சென்றனர். ஆனால், அவர்களை மனு அளிக்க விடாமல், தென்கொரிய துணைத் தூத ரகத்தின் வாயில் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியது. சந்திப்புக்கு தூதரக அதிகாரிகள் அனுமதி தர வில்லை என்றும், மின்னஞ்சல் வாயி லாக மனுவை அனுப்ப அறிவுறுத்திய தாகவும் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு, தலைவர் கள் திரும்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில், திடீரென சிஐடியு தலை வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். எதற்காக இந்த கைது நடவ டிக்கை? என்று தலைவர்கள் கேட்ட தற்கு, ‘மனு கொடுக்க வந்ததால் கைது செய்கிறோம்!’ என்று காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். மனு கொடுக்க வருவது குற்றமா? இதுதொடர்பாக, செய்தியாளர் களிடம் பேசிய அ. சவுந்தரராசன், “சாம்சங் நிறுவனம் இந்தியச் சட்டங்க ளுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்ளும் நிலையில், இந்திய சட்டங்களை மதித்து நடக்குமாறு சாம்சங் நிறுவனத்தை அறிவுறுத்து மாறு துணைத் தூதரகத்தில் மனு அளித்து முறையிடுவதற்கு வந்தோம். ஆனால், மனு கொடுக்க வந்ததே தவறு என்று கூறி காவல்துறை கைது செய்கிறது. இது மோசமான அத்துமீறல். வன்மை யான கண்டனத்திற்கு உரியது. போராட் டம் செய்யவில்லை, கோஷம் எழுப்ப வில்லை. ஆனாலும் கைது செய் கிறார்கள். மனு கொடுப்பது என்ன குற்றமா? இது நடைபாதையில் நிற்கிற வர்களை கைது செய்வதுபோல் உள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட வேண்டும். அரசுக்கு அவப் பெயரை உருவாக்கும் வேலையை காவல்துறை செய்கிறது” என்றார்.

பிப். 15- சாம்சங் தொழிலாளர்கள் கோட்டை நோக்கி நடைபயணம்!

தென்கொரிய துணைத் தூதரகத்தில் மனு அளிக்க வந்தவர்களை காவல் துறை கைது செய்த பின்னணியில், ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தின் தலைவர் இ. முத்துக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “சாம்சங் தொழிற்சாலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 27 நிர்வாகி களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 15 அன்று கோட்டை நோக்கி நடைபயணம் நடைபெறும்” என்று அறிவித்தார்.