பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்திடுக
2 Jun 2026, 10:25 pm
<p><strong>பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்திடுக</strong></p><p>கோவை, ஜூன் 2- பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவிகித இறக்குமதி வரியை முழுமையாகவும், நிரந்தரமாகவும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண் டும் என ஒட்டுமொத்த ஜவுளித் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். கோவை, பந்தயசாலை பகுதி யிலுள்ள தென்னிந்திய பஞ்சாலை கள் சங்க (சைமா - SIMA) அலுவல கத்தில் செவ்வாயன்று ஜவுளித் துறையினர் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது, இந்திய ஜவுளி சம்மேளனத் தலைவர் அஸ் வின் சந்திரன், பருத்தி ஜவுளி ஏற்று மதி கழக துணைத் தலைவர் ரவி சாம், சைமா தலைவர் துரை பழனி சாமி, துணைத்தலைவர் கிருஷ்ண குமார், பொதுச்செயலாளர் செல்வ ராஜூ ஆகியோர், ஒட்டுமொத்த ஜவு ளித்துறையினரின் சார்பில் கோரிக் கைகளை முன்வைத்தனர். அதில், ஜவுளி ஏற்றுமதிக்கு சாதகமான உலக சந்தை நிலவரம் மற்றும் பல் வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கைகளினால் தற்போது சிறந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டில் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் பருத்தி விலை நிலவி வருவதால், இந்திய ஜவுளித்துறையால் அந்த வாய்ப்பு களை முழுமையாகப் பயன்படுத் திக் கொள்ள முடியவில்லை. நமது போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான், இந்தோ னேஷியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் பருத்தி இறக்குமதிக்கு எவ்வித வரியும் இல்லை. இதனால் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்புகள் தட்டிப்பறிக் கப்படுவதோடு, சுமார் 30 முதல் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகி றது. தற்போது அறிவிக்கப்பட் டுள்ள தற்காலிக வரி நீக்கத்தால் இந்த சூழ்நிலை சில மாதங்களுக்கு மட்டுமே தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் நாட்டின் பாரம்பரியத் தொழிலான ஜவுளித்தொழிலுக்கு, தரமான பஞ்சு உரிய விலையில் எக்காலத்தி லும் தடையின்றி கிடைத்திட வேண் டும். பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் விரைவில் அமலாக உள்ள வரி யில்லா ஒப்பந்தங்களின் முழுப் பயனையும் அடைய வேண்டு மெனில், சர்வதேச சந்தையில் நிலையான போட்டித்திறன் நமக்கு மிகவும் அவசியம். எனவே, பருத்தி பருவமில்லாத காலங்களில் ஏற்ப டும் பஞ்சு பற்றாக்குறையைப் போக் கவும், தரமான பஞ்சு தேவையை பூர்த்தி செய்து பல லட்சம் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கவும், 11 சதவிகித இறக்குமதி வரியை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், என்ற னர்.</p>
