புதிய செவிலியர் கல்லூரிகளில் நிரந்தர நியமனம் செய்ய வேண்டும்: செவிலியர் மேம்பாட்டு சங்கம்
16 Jun 2026, 10:50 pm

புதிய செவிலியர் கல்லூரிகளில் நிரந்தர நியமனம் செய்ய வேண்டும்: செவிலியர் மேம்பாட்டு சங்கம்

சென்னை, ஜூன் 16 - புதிதாகத் தொடங்கப்படும் செவிலியர் கல்லூரிகளில் தற்காலிக ஒப்பந்த முறைக்கு மாற்றாக, நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கப் பொதுச்செயலாளர் நே.சுபீன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக 6 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால் இக்கல்லூரிகளில் செவிலியர் போதகர்கள், பேராசிரியர்களைத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டமிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

பதவி உயர்வின்றி நீண்டகாலமாக உள்ள அரசு செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இங்கு பணியமர்த்தலாம். மேலும், 2015 முதல் தேர்வாரியம் (MRB) மூலம் பணியமர்த்தப்பட்டு இன்னும் நிரந்தரமாக்கப்படாத செவிலியர்களைக் கொண்டு இப்பணியிடங்களை நிரப்பலாம். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், புதிய கல்லூரிகளிலும் ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிப்பது சட்டப்படி சரியானதல்ல” என்று கூறியுள்ளார்.