தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆயுதப்படை பெண் வீரர்களுக்கும் நிரந்தரப் பணி - ஓய்வூதியம்

25 Mar 2026, 5:29 pm
ஆயுதப்படை பெண் வீரர்களுக்கும் நிரந்தரப் பணி - ஓய்வூதியம்
<p><strong>ஆயுதப்படை பெண் வீரர்களுக்கும் நிரந்தரப் பணி - ஓய்வூதியம்</strong></p> <p>உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு புதுதில்லி, மார்ச் 25 - இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் பணியாற்றும் பெண் வீரர்களுக்கும், நிரந்தரப் பணி மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆயுதப்படைகளில் நிரந்தர பணி ஆணையத்தின் கீழ் அதிகாரிகளாக பணிய மர்த்தப்படுவது பெரும்பாலும் ஆண் களாகவே உள்ளனர். குறுகிய கால சேவை &nbsp;ஆணைய (SSC) பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி, ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வந் தது. இதனை எதிர்த்து &nbsp;உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. &nbsp;இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் உஜ்ஜல் புயான், &nbsp;என். கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், பெண் அதிகாரி களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப் படாதது அவர்களின் தகுதியைப் பாதித் துள்ளதுடன், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக அவர்கள் போட்டியிடுவதைத் தடுத்துள்ளது. &nbsp;நிரந்தரப் பணி உச்சவரம்பு &nbsp;சட்டவிரோதமானது நிரந்தர ஆணையம் மறுக்கப்பட்டது தனிப்பட்ட மதிப்பீடுகளின் முடிவு மட்டு மல்ல, மாறாகப் பெண்களின் தொழில் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு முறையான கட்ட மைப்பின் விளைவு என்று குறிப்பிட்ட நீதிபதி கள், பெண் அதிகாரிகளின் வருடாந்திர &nbsp;ரகசிய அறிக்கைகள் (ACR) மிகவும் மேலோட்டமாகக் கையாளப்பட்டிருப்ப தாகவும், எதிர்காலத்தில் பணியில் சேரும் பெண் அதிகாரிகளின் மதிப்பீட்டு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டன. ஓராண்டுக்கு 250 பெண்களுக்கு மட்டுமே நிரந்தரப் பணி என்ற உச்ச வரம்பு தன்னிச்சையானது, சட்டவிரோத மானது என கூறி உச்சவரம்பு விதியையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். அரசிய லமைப்பின், 142-ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட &nbsp;அதிகாரிகளுக்கும் பலன் &nbsp;இந்த தீர்ப்பில் ஏற்கெனவே பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண் அதிகாரிகள் 20 ஆண்டுகள் பணி முடித்ததாகக் கருதப்பட்டு (Deemed Service), அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் &nbsp;இதர சலுகைகள் வழங்கப்படும். &nbsp;இதற்கான நிலுவைத் தொகைகள் 2025 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள நீதிபதிகள், பெண் அதிகாரிகள் எந்தப் பிரிவில் பணியாற்றினாலும், அவர்களைக் குறித்து இந்த தேசம் பெருமிதம் கொள்கிறது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.