முந்தய பக்கம்

கபடி போட்டியில் பெரியார் பல்கலை., முதலிடம்

5 Jan 2026, 6:21 pm
கபடி போட்டியில் பெரியார் பல்கலை., முதலிடம்
<p><strong>கபடி போட்டியில் பெரியார் பல்கலை., முதலிடம்</strong></p> <p>சேலம், ஜன.5- தென் மண்டல கபடிப் போட்டியில் சேலம் பெரியார் பல் கலைக்கழக மாணவிகள் முதலிடம் வென்று, அகில இந்திய &nbsp;போட்டியில் பங்கு கொள்ள இருக்கின்றனர். தென் மண்டல பல்கலைக்கழக அளவிலான மகளிர் கபடி &nbsp;போட்டிகள் கடந்த ஆண்டு அக்.29 முதல் நவ.2 வரை விநாயகா மிசன்ஸ் ரிசெர்ச் பவுண்டேஷன் சென்னையில் நடை பெற்றது. இதில், 70 அணிகள் கலந்து கொண்டனர். இப் போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக மகளிர் கபடி அணி &nbsp;வீரர்கள் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று, &nbsp;மத்திய பல்கலைக்கழகம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அகில &nbsp;இந்திய போட்டியில் பங்கு கொள்ள இருக்கின்றனர். &nbsp;இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மகளிர் கபடி போட்டி அணி வீரர்களுக்கு அணி மேலாளர் மற்றும் பயிற்று நருக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஆர்.சுப்பிரமணி மற்றும் துணை வேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் எஸ். ஜெயந்தி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.ராஜ் உள்ளிட் டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதில் பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குநர் முனை வர் வெங்கடாசலம் அணி மேலாளர் டாக்டர் ஆர். சுரேஷ் குமார் &nbsp;மற்றும் பயிற்றுனர் ஆர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram