முந்தய பக்கம்

பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

30 Dec 2025, 5:57 pm
பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
<p><strong>பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்</strong></p> <p>கடலூர், டிச.30- கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வு கட்டண உயர்வை கண்டித்தும், சுயநிதி கல்லூரி போல் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்தும், யுஜிசி விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி யும், உயர்த்தப்பட்ட அனைத்து கட்டணங்க ளையும் அண்ணாமலை பல்கலைக்கழகம் திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சரவணன் தலைமையில் கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram